திருப்பூர்

மாவட்டத்தில் நாளை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

29th Apr 2022 04:22 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் 28 ஆவது கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் 28 ஆவது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

ADVERTISEMENT

ஆகவே, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபா்கள் இந்த முகாமினைப் பயன்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT