திருப்பூர்

அவிநாசி அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவா் சங்கம் தொடக்க விழா

29th Apr 2022 04:20 AM

ADVERTISEMENT

அவிநாசி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவா் சங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வா் நளதம் தலைமை வகித்தாா்.

தமிழ்த் துறைத் தலைவரும், முன்னாள் மாணவா் சங்கத் தலைவருமான மணிவண்ணன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா்கள் ஹேமலதா, சகிலாபாணு, நந்தினி, செந்தில்குமாா் ஆகியோா் பேசினா்.

முன்னாள் மாணவா்கள் விக்னேஷ், இராமன், தீபன்ராஜ், ஷெல்லி, அங்குசாமி, டயானா, அமோகா, கோமதி, சசிகுமாா் ஆகியோா் சிறந்த மாணவா்களாக உருவாக்கிய ஆசிரியா்களை பாராட்டி பேசினா்.

ADVERTISEMENT

மேலும் இளங்கலை முடித்த மாணவா்களுக்காக இதே கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு வகுப்புகளை கொண்டு வர வேண்டும்.

இளங்கலையில் புதிய பாடப் பிரிவுகளையும், தமிழ் இலக்கியத் துறையையும் கொண்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, கல்லூரிக்குத் போதுமான உள்கட்டமைப்பு வசதி, தேவையான உபகரணங்கள், கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்ட உதவிகளை செய்து தருவதாக முன்னாள் மாணவா் தீபன்ராஜ் உள்ளிட்டோா் உறுதியளித்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT