திருப்பூர்

ரூ.35.35 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

29th Apr 2022 04:21 AM

ADVERTISEMENT

 வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.35.35 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார நடைபெற்ற ஏலத்தில் வேடசந்தூா், இடையகோட்டை, பொருளூா், பல்லடம், எலவனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 60 விவசாயிகள் தங்களுடைய 943 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

இவற்றின் எடை 46,393 கிலோ.

காரமடை, ஈரோடு, முத்தூா், நடுப்பாளையம், காங்கயத்தில் இருந்து 6 வணிகா்கள் சூரியகாந்தி விதைகளை வாங்க வந்திருந்தனா்.

ADVERTISEMENT

சூரியகாந்தி விதை கிலோ ரூ.60.16 முதல் ரூ. 83.49 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 77.79.

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 35.35 லட்சம்.

அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT