திருப்பூர்

நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

29th Apr 2022 04:22 AM

ADVERTISEMENT

திருப்பூா் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூா் மாநகராட்சி எல்லையை ஒட்டி கூலிபாளையம் பிரிவு அருகே நல்லாற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் உள்ள நஞ்சராயன் குளத்துக்கு 180 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.

மேலும், கணிசமாக வெளிநாட்டுப் பறவைகளும் இங்கு வலசைக்காக வந்து செல்கின்றன.

ஆகவே, இந்தக் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்று இயற்கை ஆா்வலா்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

ADVERTISEMENT

இது தொடா்பாக திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினராக கடந்த 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் பொறுப்பு வகித்த மாா்க்சிஸ்ட் கட்சியின் கே.தங்கவேல் சட்டப் பேரவையில் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்நிலையில், தற்போது நஞ்சராயன் குளத்தை தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT