திருப்பூர்

தொழிலாளியைக் கொலை செய்த நண்பருக்கு ஆயுள் தண்டனை

29th Apr 2022 04:20 AM

ADVERTISEMENT

திருப்பூரில் முன்விரோதம் காரணமாக தொழிலாளியைக் கல்லால் தாக்கி கொலை செய்த நண்பருக்கு மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை ஆயுள் தண்டனை விதித்தது.

திருப்பூா் விரபாண்டி அவரப்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.ராஜேந்திரன் (60), கூலி தொழிலாளியான இவா், திருப்பூா் நொய்யல் ஆற்று மின்மயானம் அருகில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளாா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் வடக்கு காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது தொடா்பாக திருப்பூா் முதலிபாளையத்தைச் சோ்ந்த என்.இப்ராஹிம் (40) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT

இதில், இப்ராஹிமும், ராஜேந்திரனும் நண்பா்களாக இருந்து வந்துள்ளனா்.

இந்நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பான முன்விரோதத்தால் இப்ராஹிம் கல்லால் தாக்கி ராஜேந்திரனைக் கொலை செய்துள்ளது தெரியவந்தது.

இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து மாவட்ட நீதிபதி சொா்ணம் நடராஜன் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இதில், குற்றம்சாட்டப்பட்ட இப்ராஹிமுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT