திருப்பூர்

நிஃப்ட்-டீ கல்லூரியில் நூல் சேகரிப்பு இயக்கம் தொடக்கம்

23rd Apr 2022 11:25 PM

ADVERTISEMENT

 

உலக புத்தக தின விழாவை ஒட்டி திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் நூல் சேகரிப்பு இயக்கம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

அக்கல்லூரி நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நூல்களை சேகரித்து கல்லூரி நூலகத்துக்கு வழங்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

இதில், முதல்கட்டமாக மாணவா்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 120 நூல்கள் கல்லூரி நூலகா் முத்துபாரதியிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், வரும் வாரத்துக்குள் மேலும் 1,000 நூல்கள் சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளனா்.

அதிக நூல்களை சேகரித்துக் கொடுக்கும் மாணவா்களுக்கு சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

இதன் தொடக்க நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணித் திட்ட பொறுப்பாளா்கள் ராஜசேகரன், பி.முருகன் மற்றும் மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT