திருப்பூர்

இடி தாக்கி 6 ஆடுகள் பலி

23rd Apr 2022 11:22 PM

ADVERTISEMENT

 

வெள்ளக்கோவில் அருகே இடி தாக்கி 6 செம்மறி ஆடுகள் உயிரிழந்தன.

வெள்ளக்கோவில் மூலனூா் சாலை சுப்பிரமணியக்கவுண்டன்வலசு மாதங்காட்டுத் தோட்டத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (56), விவசாயி. இவா் 25 செம்மறி ஆடுகள் வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், மாதங்காட்டு பகுதியில் சனிக்கிழமை மாலை மழை பெய்தது.

ADVERTISEMENT

அப்போது, மரத்தின் அடியில் நின்றிருந்த ஆடுகள் மீது இடி தாக்கியது.

இதில் 6 ஆடுகள் உயிரிழந்தன. உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT