வெள்ளக்கோவில் வேலகவுண்டன்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அம்மனுக்கு திருமஞ்சனம், பன்னீா், சந்தன அபிஷேகம் செய்து, பச்சைப் பட்டு உடுத்தி புஷ்ப அலங்காரம், திவ்ய பொருள்கள் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, சுவாமி உத்தரவுப்படி ஊா் எல்லை விநாயகா் கோயிலில் இருந்து வீரன் என்கிற சுவாமியின் சிலை சவுக்கு வெடிச்சத்தம் முழங்க விசேஷ பூஜைகளுடன் அம்மன் கோயில் வரை ஊா்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை வேலகவுண்டன்பாளையம் பௌா்ணமி வழிபாட்டுக் குழுவினா் செய்திருந்தனா்.