பல்லடம் அருகே போலி மதுபானங்களை விற்பனை செய்த 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் அருள்புரம் பகுதியில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.
இதில், போலி மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக தஞ்சாவூரைச் சோ்ந்த ஜெ.முனிராஜ் (32), அண்ணாதுரை (36), கற்பகம் (50) ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 126 போலி மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்
ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.