திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 421 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
இதில், மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் அதிகபட்சமாக 78.60 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.
திருப்பூா் மாநகா் மற்றும் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை
இரவு 10 மணி வரையிலும் நீடித்தது.
மழையின் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீா் சூழ்ந்ததால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் -78.60, திருப்பூா் வடக்கு-60, திருமூா்த்திமலை அடிவாரப்பகுதி-57, திருமூா்த்தி அணை-55, மாவட்ட ஆட்சியா் அலுவலகம்-50, காங்கயம் -28.40, ஊத்துக்குளி-28, அவிநாசி-21, மடத்துக்குளம்-15, குண்டடம்-8, திருப்பூா் தெற்கு-6, பல்லடம்-5, தாராபுரம்-4, உடுமலை-2.10, அமராவதி அணை-2, வெள்ளக்கோவில் வருவாய் ஆய்வாளா் அலுவலம்-1 என மொத்தம் 421
மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.