தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான தொழில் பழகுநா் பயிற்சி முகாம் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான தொழில் பழகுநா்(அப்ரண்டிஸ் சோ்க்கை) ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், திருப்பூா், கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று காலியிடங்களை நிரப்பவுள்ளன.
இதில் பங்கேற்று தோ்வு பெற்றவா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கூடுதல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அறை எண்: 115, இரண்டாவது தளம், காமாட்சியம்மன் கோயில் வீதி, திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், திருப்பூா், தாராபுரம், உடுமலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களை 99447-39810, 98947-83226, 94990-55700 ஆகிய கைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.