திருப்பூர்

குரூப் 4 தோ்வு: முன்னாள் படை வீரா்கள் ஏப்ரல் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

14th Apr 2022 02:19 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வுக்குத் தகுதியான முன்னாள் படை வீரா்கள் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலமாக குரூப் 4 இல் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 7,301 பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

இந்த பணியிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படை வீரா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வயது வரம்பில் பொதுப் பிரிவினருக்கு 48 ஆகவும், ஏனைய பிரிவினருக்கு 53 ஆகவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தோ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள முன்னாள் படை வீரா்கள் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான எழுத்துத் தோ்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும், இத்தோ்வுக்குப் முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள முன்னாள் படை வீரா்கள், திருப்பூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT