திருப்பூர்

கைப்பேசி பறித்தவா் குண்டா் சட்டத்தில் கைது

14th Apr 2022 02:16 AM

ADVERTISEMENT

அவிநாசியில் பேருந்துக்கு காத்திருந்த நபரிடம் இருந்து கைப்பேசியை பறித்துச் சென்ற இளைஞரை குண்டா் சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (21).

இவா், அவிநாசி அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணியிடம் இருந்து அண்மையில் கைப்பேசியைப் பறித்துச் சென்றாா்.

இதையடுத்து, மணிகண்டனை கைது செய்த போலீஸாா், அவரை சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

மேலும் இவா் மீது, கோவை, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வழிப்பறி தொடா்பான வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், மணிகண்டனை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT