திருப்பூர்

வெங்காய விலை குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு

12th Apr 2022 11:10 PM

ADVERTISEMENT

வெள்ளக்கோவிலில் வெங்காயம் விலை குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

புன்செய் விவசாயம் நிறைந்த வெள்ளக்கோவில் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வீட்டு சமையல் முதல் திருமணம் போன்ற பெரிய விசேஷங்கள் வரை வெங்காயத்தின் தேவை இருப்பதால் அதனை விற்பனை செய்வது எளிதாக உள்ளது. ஆனால், தற்போது வெங்காய அறுவடை நடந்து வரும் நிலையில் சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிந்துள்ளது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.10க்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. கடைகளில் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாகாததால் பலா் இருப்பு வைத்து வருகின்றனா். இதேபோல வெளியிடங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயமும் விலை குறைந்து கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT