திருப்பூர்

மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி பலி

12th Apr 2022 11:09 PM

ADVERTISEMENT

தாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அலங்கியம் காவல் துறையினா் கூறியதாவது:

தாராபுரத்தை அடுத்துள்ள அலங்கியம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.பிரகாஷ் (27). இவா் அதே பகுதியில் உள்ள தனியாா் பட்டறையில் வெல்டராக பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், இரும்புக் கதவுக்கு பிரகாஷ் செவ்வாய்க்கிழமை பெயிண்டிங் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பிரகாஷ் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிகிறது. அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் பிரகாஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து அலங்கியம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT