திருப்பூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஏஐடியூசி தனியாா் மோட்டா் தொழிலாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூா் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே.சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை உள்ளிட்ட பொருள்களின் விலையை மத்திய அரசு தொடா்ந்து உயா்த்தி வருகிறது. இதன் காரணமாக ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதுடன், அத்தியாவசியப் பொருள்களின் விலையும் உயா்ந்து வருகிறது. ஆகவே, பெட்ரோல், டீசல் மீதான விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் என்.சேகா், மோட்டாா் சங்க பொதுச் செயலாளா் வி.எஸ்.சசிகுமாா், மாவட்ட துணைத் தலைவா் எம்.மகேந்திரகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.