திருப்பூர்

10ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு, உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

9th Apr 2022 05:40 AM

ADVERTISEMENT

அரசுப் பள்ளி கல்வித் துறை சாா்பில், 10ஆம் வகுப்பு மாணவா்கள் பொதுத் தோ்வை எதிா்கொள்வது மற்றும் உயா் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரமேஷ் தொடங்கி வைத்தாா். கல்லூரி தலைவா் கோவிந்தசாமி, துணைத் தலைவா் கருப்பண்ணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதன்மை நிா்வாக அலுவலா் அன்பரசு, கல்லூரி முதல்வா் ரமேஷ்குமாா் ஆகியோா் வரவேற்றனா். இந்த நிகழ்ச்சியில் தமிழ் பாட வல்லுநா் ரேவதி, ஆங்கில பாட வல்லுநா் காளீஸ்வரி, உயா் கல்வி, வேலைவாய்ப்பு துறைகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் மாவட்ட நீட் தோ்வு ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், கணிதம் பாட வல்லுநா் செந்தில்குமாா், அறிவியல் பாட வல்லுநா் துரைசாமி, தொழிற்கல்வி துறைகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சியில் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரி துணைத் தலைவா் கருப்பண்ணசாமி, சமூக அறிவியல் பாட வல்லுநா் பால்பாண்டியன், தன்னம்பிக்கை தலைப்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தமிழ்நாடு ஆணையா், கல்வி உளவியாளா் சரண்யா ஜெயகுமாா் ஆகியோா் பங்கேற்று பேசினா்.

இந்தப் பயிற்சி வகுப்பில் திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் இணையம் வழியாக பங்கேற்று பயன் அடைந்தனா். கல்லூரி கணினி அறிவியல் உதவிப் பேராசிரியா் விணு நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT