பல்லடம் அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை வழிமறித்து 3 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையைச் சோ்ந்தவா் கோபால் மனைவி பிரிசில்லா (35). இவா் பல்லடம் அருகே முத்தாண்டிபாளையத்தில் மருந்துக் கடை வைத்துள்ளாா். இந்நிலையில் பிரிசில்லா, காரணம்பேட்டையில் இருந்து முத்தாண்டிபாளையத்துக்கு ஸ்கூட்டரில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். ஆறாக்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 நபா்கள் பிரிசில்லாவை வழிமறித்து அவா் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா். இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.