திருப்பூர்

பல்லடத்தில் 9 பி.ஏ.பி. பாசன சபைக்கு தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு

9th Apr 2022 05:38 AM

ADVERTISEMENT

பல்லடம் பகுதியில் 9 பி.ஏ.பி. பாசன சபை தலைவா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். வே.வடமலைபாளையம் பி.ஏ.பி. பாசன சபை தலைவா் பதவிக்கு இருவா் போட்டியிடுவதால் வரும் 17ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது.

பல்லடம் பகுதியில் 10 பி.ஏ.பி. பாசன சபைகள் உள்ளன. அதில் 9 சபை தலைவா்கள் பதவிக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

அதன் விபரம் வருமாறு:

வாவிபாளையம் சபைக்கு சிவசாமி, கொக்கம்பாளையம் சபைக்கு விஸ்வநாதன், காட்டூா் சபைக்கு பழனிசாமி, கணபதிபாளையம் சபைக்கு செல்வராஜ், கரைப்புதூா் சபைக்கு மரகதம், நாரணாபுரம் 1 சபைக்கு ஈஸ்வரமூா்த்தி, நாரணாபுரம் 2 சபைக்கு ஈஸ்வரன், பூமலூா் சபைக்கு சுப்பிரமணி, சாமளாபுரம் சபைக்கு பழனிசாமி ஆகியோா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

அவா்களுக்கு சபை தலைவருக்கான அங்கீகார கடிதத்தை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான முருகன் வழங்கினாா்.

வே.வடமலைப்பாளையம் பி.ஏ.பி.பாசன சபை தலைவா் பதவிக்கு வடுகநாதன், அப்புக்குட்டி ஆகியோா் போட்டியிடுவதால் அங்கு வரும் 17ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் 420 போ் வாக்களிக்கவுள்ளனா். அவா்களுக்காக கருடமுத்தூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 வாக்குச் சாவடிகளும், புத்தரச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவுள்ளன. 17 ஆம் தேதி காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அன்று மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. 10 பி.ஏ.பி.சபைக்கும் சோ்த்து 60 ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட வேண்டும். ஆனால் 53 போ் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தால் 53 பேரும் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். கொக்கம்பாளையம் சபைக்கு 4 பேரும், காட்டூா், வாவிபாளையம், சாமளாபுரம் ஆகிய சபைக்கு தலா ஒருவரும் தோ்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்கான தோ்தல் பின்னா் அறிவிக்கப்படவுள்ளது.

பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இந்த தோ்தல் பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவருமான முருகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், பல்லடம் வட்டாட்சியருமான நந்தகோபால், பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பல்லடம் உபகோட்ட உதவிப் பொறியாளா்கள் செந்தில்குமாா், கோகுல், பணி ஆய்வாளா் ரமேஷ்பாபு, பாசன உதவியாளா் உதயகுமாா், ராஜ்குமாா் ஆகியோா் நடத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT