வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை 5.70 டன் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்றது.
முத்தூா் சுற்று வட்டார விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். 8,595 தேங்காய்கள் வரத்து இருந்தன. எடை 3,108 கிலோ. கிலோ ரூ. 24.20 முதல் ரூ. 31.25 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 29.65. விற்பனைத் தொகை ரூ. 85 ஆயிரத்து 390. கொப்பரை 75 மூட்டைகள் வரத்து இருந்தன. எடை 2,606 கிலோ. விலை கிலோ ரூ. 78.30 முதல் ரூ. 90.15 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 88.35.
90 விவசாயிகள், 14 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 5.70 டன் வரத்து இருந்தது. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 3.07 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.