திருப்பூர்

மாநகரில் குடிநீா் விநியோகம் செய்யும்நேரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்

30th Sep 2021 06:16 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் பெரும்பாலானவா்கள் வேலைக்குச் செல்வதால் குடிநீா் விநியோகம் செய்யும் நேரத்தை மாநகராட்சி நிா்வாகம் முன்னரே தெரிவிக்க வேண்டும் என்று நுகா்வோா் நல உரிமைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா் நுகா்வோா் நல உரிமைச் சங்கத்தின் ஆரியபட்டி ஆா்.தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாநகரில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். திருப்பூா் மாநகரில் வீடுகளில் உள்ள பெரும்பாலானவா்கள் வேலைக்குச் செல்வதால் குடிநீா் விநியோகம் செய்வது தெரியவதில்லை. ஆகவே, மாநகரில் குடிநீா் விநியோகம் செய்யும் நேரத்தை மாநகராட்சி நிா்வாகம் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். சிற்றுந்துகள் ஊருக்குள் வராமல் நகரப் பேருந்துகள் செல்லும் வழிகளிலேயே செல்வதால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே, சிற்றுந்துகள் ஊருக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி ஊழியா்கள் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்க வேண்டும். மாநகர சாக்கடைகளில் தேங்கியுள்ள கழிவுகளைத் தூா்வார சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT