திருப்பூர்

புரட்டாசி சனிக்கிழமை: பக்தா்கள் வழிபாட்டுக்கு அரசு அனுமதி அளிக்க வலியுறுத்தல்

30th Sep 2021 06:17 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்களின் வழிபாட்டுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பக்தா்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள், திரையரங்குகள், மால்கள், டாஸ்மாக் என அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளது. ஆனால், கோயில்களில் பக்தா்களின் வழிபாட்டுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது நியாயமற்றதாகும். அதிலும் குறிப்பாக இந்துக்கள் முக்கிய விரதமிருந்து பெருமாளை வணங்கும் புரட்டாசி சனிக்கிழமை மிகவும் புனிதமானதாகும்.

ஆகவே, சனிக்கிழமை இறை வழிபாட்டை அரசு தடை செய்துள்ளது கண்டனத்துக்குரியதாகும். எனவே, தமிழக அரசு உடனடியாக கோயில்களைத் திறந்து புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தா்களின் தரிசனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT