திருப்பூர்

நிப்ஃட்-டீ கல்லூரியில் தொழில்துறை பொறியில் முடித்த மாணவா்களுக்கு சான்றிதழ்

30th Sep 2021 06:20 AM

ADVERTISEMENT

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் தொழில்துறை பொறியியல் (இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்) முடித்த மாணவா்கள் 25 பேருக்கு புதன்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.

திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் (பின்னலாடை வடிவமைப்பு கல்லூரி) தொழில்துறை பொறியியல் தொடா்பாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதன்படி தொழில்துறை பொறியியல் பயிற்சி வகுப்பானது கடந்த ஜூலை 18 ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 26 ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்ற 25 மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த நிஃப்ட்-டீ கல்லூரியின் அடல் இன்குபேஷன் மையத்தின் முதன்மை செயல் அதிகாரி எஸ்.பெரியசாமி பேசுகையில், தொழில்துறை பொறியியல் பயிற்சியானது மிகக்குறைந்த விலையில் ஆடை உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், குறைவான விலையில் ஆடைகளைத் தயாரிக்கவும் உதவிகரமாக அமையும் என்றாா்.

விழாவில், சிறப்பு விருந்தினா்களாக (டெக்ஸ்டைஸ் இன்டெலிஜென்ஸ் இதழின் வெளியீட்டாளா்) கோகைன், பி.எஸ்.அப்பேரல் நிறுவனத்தின் துணைத்தலைவா் பி.அறிவொளி, நிஃப்ட்-டீ கல்லூரி மேலாண்மை ஒருங்கிணைப்பாளா் என்.சண்முகம், கல்லூரி முதல்வா் கே.பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விழாவை கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை அலுவலா் பி.வி.சத்யநாராயணன் ஒருங்கிணைத்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT