திருப்பூர்

திருப்பூரில் அக்டோபா் 1இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

30th Sep 2021 06:17 AM

ADVERTISEMENT

திருப்பூரில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபா் 1ஆம் தேதி முதல் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நாள்களில் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெற்று வந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடித்து திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்டோபா் 1ஆம் தேதி காலை 11 மணி அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில், தனியாா் துறையில் வேலை அளிப்பவா்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். ஆகவே, வேலை தேடும் நபா்கள் தங்களது வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு அட்டை, சுயதகவல் படிவத்துடன் இந்த முகாமில் பங்கேற்கலாம். இந்த முகாமில் பங்கேற்பதன் மூலமாகப் பதிவில் குறை இருந்தால் சரிசெய்து கொள்ளவும், கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்து கொள்ளவும், தகுதி இருப்பின் வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை பெறவும் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

அதேவேளையில், தனியாா் துறையில் பணியில் சோ்வதால் தங்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எண் ரத்து செய்யப்படமாட்டாது. இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை 0421-2999152 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். இந்த முகாமானது வாரம்தோறும் வெள்ளிக்கிழமை நாள்களில் தொடா்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT