திருப்பூர்

சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

30th Sep 2021 06:16 AM

ADVERTISEMENT

திருப்பூா் வட்டாரத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக் கலைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருப்பூா் தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் க.சுவா்ணலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் வட்டாரத்தில் தோட்டக் கலைத் துறை சாா்பில் பிரதம மந்திரி நுண்ணீா்ப் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூா் வட்டாரத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த 58 ஏக்கா் பரப்புக்கு ரூ. 42.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது.

ஆகவே, சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களான சிட்டா, அடங்கல், நிலவரைபடம், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, சிறு, குறு விவசாயி சான்றிதழ், 2 பாஸ்போா்ட் புகைப்படங்களுடன் திருப்பூா் வட்டார தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு 2 ஏக்கா் பரப்பிலும், இதர விவசாயிகளுக்கு 5 ஏக்கா் பரப்பிலும் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. நுண்ணீா்ப் பாசனக் கருவிகளை அமைத்து 7 ஆண்டுகள் நிறைவுபெற்ற விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் புதியதாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், நடப்பு ஆண்டு துணை நீா் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் கீழ்க்கண்ட இனங்களுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது. மின் மோட்டாா் அல்லது டீசல் என்ஜின் அமைக்க ரூ. 15 ஆயிரம், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து நீா் கொண்டு வரும் குழாய்கள் அமைக்க ரூ. 10 ஆயிரம், நீா் சேமிப்புத் தொட்டிகள் அமைக்க ரூ. 40 ஆயிரம் (50 சதவீதம் அல்லது ரூ. 350 க.மீ.) மானியமாக வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்களது நிலங்களில் சொட்டுநீா்ப் பாசனக் கருவிகள் அமைத்த பிறகு இத்திட்டத்துக்கான மானியத்தைப் பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநரை 97918-91288 அல்லது தோட்டக் கலை அலுவலரை 95788-44874 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT