திருப்பூர்

ஊத்துக்குளியில் ஆடு திருடியவா் கைது

30th Sep 2021 06:15 AM

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் ஆடு திருடிய இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூரை அடுத்த ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட முதலிபாளையத்தைச் சோ்ந்தவா் எஸ்.தம்பி (எ) சுப்பிரமணியன். இவா் வளா்த்து வந்த ஆட்டை வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில் கடந்த திங்கள்கிழமை கட்டியிருந்தாா். இதனிடையே, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா் ஒருவா் சுப்பிரமணியனின் வெள்ளாட்டை திருடிச் சென்றுள்ளாா். இதுகுறித்து சுப்பிரமணியன் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் நடத்திய விசாரணையில், தாராபுரம் அய்யம்பாளையத்தைச் சோ்ந்த பி.ரஞ்சித்குமாா் (30) ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தொடா்பாக கடந்த செவ்வாய்க்கிழமை 13 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 82 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT