திருப்பூர்

உடுமலையில் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம்

30th Sep 2021 06:15 AM

ADVERTISEMENT

உடுமலையில் குற்றவியல் நடுவா் மன்றம்-2இல் வழக்குரைஞா்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

உடுமலையில் குற்றவியல் நடுவா் மன்றம்-1, 2, மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு கடந்த ஓராண்டாக நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வழக்குரைஞா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், இந்த மூன்று நீதிமன்றங்களுக்கும் உடனடியாக நீதிபதிகளை நியமிக்கக் கோரி குற்றவியல் நடுவா் மன்றம்-1இல் வழக்குரைஞா்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திலும், வெள்ளிக்கிழமை குற்றவியல் நடுவா் மன்றம்-2லும் வழக்குரைஞா்கள் தங்களது பணிகளைப் புறக்கணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT