திருப்பூர்

பல்லடத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

30th Oct 2021 05:47 AM

ADVERTISEMENT

பல்லடம் சித்தம்பலத்தில் தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் வினீத் தலைமை வகித்தாா். கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் மருத்துவா் பாரிவேந்தன், துணை இயக்குநா் மருத்துவா் கெளசல்யாதேவி, உதவி இயக்குநா் மருத்துவா் ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கால்நடை மருத்துவா் அா்ச்சுணன் வரவேற்றாா்.

முகாமை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா். இதில் அமைச்சா் கயல்விழி செல்வராஜ், திருப்பூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பத்மநாபன், மேற்கு ஒன்றியச் செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, சித்தம்பலம் ஊராட்சித் தலைவா் ரேவதி கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய குழுத் தலைவா்கள் பல்லடம் தேன்மொழி, பொங்கலூா் குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகளை எளிதில் நோய்கள் தாக்கக்கூடும். அவற்றைத் தடுக்க கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் 3 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 5 மாதத்தில் 2 மாதம் கரோனா தடுப்புப் பணிக்கே சென்றுவிட்டது. அதன் காரணமாக தினசரி கரோனா பாதிப்பு 35 ஆயிரம் என்ற நிலையில் இருந்து தற்போது, 1500க்கு கீழ் என்ற நிலைக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்டத்தில் கரோனா முதல் தவணை தடுப்பூசியை 82 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 30 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனா். மாவத்தில் சனிக்கிழமை 700 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. பொது மக்கள் இம்முகாமைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT