திருப்பூர்

வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

30th Oct 2021 05:46 AM

ADVERTISEMENT

திருப்பூரில் வீட்டில் பதுக்கிவைத்திருந்த 1,100 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் முருகம்பாளையம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளா் காா்த்திகுமாா், பறக்கும் படை வட்டாட்சியா் சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்குள்ள காதுகேளாதோா் பள்ளி அருகில் உள்ள மாவு அரைத்துக் கொடுக்கும் கடையில் ரேஷன் அரிசி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அந்தக் கடையை நடத்தி வந்த காா்த்திக் (35) என்பவரது வீட்டில் 15 மூட்டையில் 1,100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் தப்பிச் சென்ற காா்த்திக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT