திருப்பூர்

காங்கயத்தில் இன்று முதல் குடிநீா் விநியோகம்

DIN

காங்கயத்தில் உடைந்த குடிநீா்க் குழாய் சீரமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று காங்கயம் நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி காவிரி ஆற்று குடிநீா் நீரேற்று நிலையத்தில் இருந்து, திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட முத்தூா், காங்கயம், வெள்ளக்கோவில், தாராபுரம், குண்டடம், மூலனூா் ஆகிய பகுதிகளுக்கு ராட்சதக் குழாய்கள் மூலம் குடிநீா் கொண்டு செல்லப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், முத்தூா் அருகே கொடுமுடி சாலைப் பகுதியில் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயில் 2 நாள்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொருத்தப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக இரும்புக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, காங்கயம் நகரப் பகுதியில் கடந்த 2 நாள்களாக குடிநீா் விநியோகம் தடைபட்டது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் முத்துக்குமாா் கூறியதாவது: குடிநீா்க் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. காங்கயம் நகராட்சிப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முதல் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT