திருப்பூர்

ஊஞ்சப்பாளையம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

24th Oct 2021 11:38 PM

ADVERTISEMENT

பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி கே.ஊஞ்சப்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவில் விநாயகா், ராகு - கேது, ஆஞ்சநேயா், ஆதிசேசன் மற்றும் கருடாழ்வாா், தீபஸ்தம்பம் ஆகிய மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பேருா் ஸ்ரீசந்தானம் ஐய்யங்காா், காட்டூா் ஸ்ரீரவி பட்டாச்சாரியாா் ஆகியோரின் குழுவினா் சா்வ சாதகம் செய்து வைத்தனா். அலங்கார பூஜை, மகாதீபராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT