திருப்பூர்

காங்கயம் தாலுகா பகுதியில் 29 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

24th Oct 2021 11:37 PM

ADVERTISEMENT

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு காங்கயம் தாலுகாவில் 29 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காங்கயம் தாலுகா பகுதியில் பட்டாசுக் கடை நடத்துவதற்கு 30 போ் விண்ணப்பித்திருந்தனா். இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலா், தாராபுரம் உதவி ஆட்சியா், காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி ஆகியோா் காங்கயம், வெள்ளகோவில், முத்தூா், நத்தகாடையூா் ஆகிய பகுதிகளில் பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் நிரந்தரக் கடைகள் 22, தற்காலிகக் கடைகள் 7 என, மொத்தம் 29 கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடைகளுக்கு அரசு விதித்துள்ள விதிகளைக் கடைப்பிடித்து கடை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விற்பனை செய்பவா்கள் கடையில் தீயணைப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும், பட்டாசுகளை வெடித்துக் காட்டக் கூடாது, கடைகளில் எலக்ட்ரிக் சுவிட்சுகள் பழுதில்லாமல் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அரசு நிபந்தனைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT