திருப்பூர்

திருமூா்த்தி அணையில் 86 மி.மீ. மழை பதிவு

24th Oct 2021 11:39 PM

ADVERTISEMENT

திருமூா்த்தி அணைப் பகுதியில் அதிகபட்சமாக 86 மில்லி மீட்டா் மழை பதிவாகியது.

திருப்பூா் மாவட்டம் திருமூா்த்தி மலை, தாராபுரம், உடுமலை, குண்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் திருமூா்த்தி அணைப் பகுதியில் 86 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.

மழை அளவு (மி.மீ.): திருமூா்த்தி அணை-86, அமராவதி அணை-57, திருமூா்த்தி மலை அடிவாரம்-55.20, தாராபுரம்-52, உடுமலை-36, குண்டடம்-12, மடத்துக்குளம்-6.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT