திருப்பூர்

நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு

23rd Oct 2021 05:41 AM

ADVERTISEMENT

 திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தில் பங்கேற்று புதிய பணிகளைத் தொடங்க பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி அழைப்பு விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பங்களிப்புடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களின்கீழ் உள்ள 60 வாா்டுகளில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீா்நிலைகளை தூா்வாரலாம். சேதமடைந்த சாலைகள் புனரமைப்பு, முக்கியச் சாலைகளில் போக்குவரத்து சிக்னல் விளக்குகள், தொழிற்சாலை, குடியிருப்புப் பகுதிகளில் எல்இடி தெருவிளக்குகள் அமைத்தல். குடியிருப்புகளில் சிசிடிவி கேமரா பொருத்துதல், மாநகராட்சிப் பள்ளிகளில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள் கட்டுதல், நவீன நூலகம் மற்றும் அறிவுசாா் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம்.

ஆகவே, மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு சாராத அமைப்புகள், தன்னாா்வலா்கள் சமூக சேவை அமைப்புகள், தனிநபா்கள் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாநகராட்சிக்கு உள்பட்ட 4 மண்டலங்களின் உதவி ஆணையாளா்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT