திருப்பூர்

அக்டோபா் 29 இல் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

23rd Oct 2021 05:43 AM

ADVERTISEMENT

 திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா் நாள் கூட்டம் அக்டோபா் 29 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா் நாள் கூட்டம் அக்டோபா் 29 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும், விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்க ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக்கலை அலுவலா் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் இந்தக்கூட்டத்தில் அமைக்கப்படவுள்ளது. இந்த மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT