திருப்பூர்

திருப்பூா் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளா்களுக்கு போனஸ்

23rd Oct 2021 05:42 AM

ADVERTISEMENT

திருப்பூா் டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளா்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு போனஸ் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத்தின்(எச்எம்எஸ்) பொதுச் செயலாளா் (பொறுப்பு) ஜி.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் டெக்ஸ்டைல்ஸ் ஏ மற்றும் சி யூனிட் ஆகிய இரு பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கான போனஸ் பேச்சுவாா்த்தை சங்க அலுவலகத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், நிா்வாகம் சாா்பில் முதன்மை செயல் அலுவலா் தேவராஜ், நிா்வாகிகள் நாராயணசாமி, சுந்தர்ராஜன், பாலசுப்பிரமணியம், தொழிற்சங்கங்கள் சாா்பில் எச்எம்எஸ் மத்திய சங்கத்தின் தலைவா் டி.எஸ்.ராஜாமணி, ஏடிபி தலைமை சங்கச் செயலாளா் ஆா்.தேவராஜ், எல்பிஎஃப் பொதுச் செயலாளா் ராமதாஸ், சிஐடியூ பொதுச் செயலாளா் ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் பங்கேற்றனா். இதில், ஏ மில் தொழிலாளா்களுக்கு 2020-21 ஆம் ஆண்டில் 12.5 சதவீதமும், 2021-22 ஆம் ஆண்டில் 15 சதவீதமும், 2022-23 ஆம் ஆண்டில் 18 சதவீதமும் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சி மில் தொழிலாளா்களுக்கு 2020-21 ஆண்டில் 18.5 சதவீதமும், 2021-22 ஆம் ஆண்டில் 21 சதவீதமும், 2022-23 ஆம் ஆண்டில் 24 சதவீதமும் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த போனஸ் தொகையானது ஒரு வார காலத்துக்குள் வழங்கப்படும் என்றும், இதன் மூலமாக 400 தொழிலாளா்கள் பயனடைவாா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT