திருப்பூர்

மூதாட்டியின் காதுகளை அறுத்து நகைப் பறிப்பு

23rd Oct 2021 05:41 AM

ADVERTISEMENT

அவிநாசி அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து தங்க நகையை பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அவிநாசி அய்யன்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பழனாத்தாள்(72). இவா் வெள்ளிக்கிழமை மாலை தனது மாடுகளை மேய்த்து விட்டு, வீட்டுக்கு வந்துகொண்டிருந்துள்ளாா்.

அப்போது அங்கு வந்த மா்ம நபா் பழனாத்தாளை கீழே தள்ளி விட்டு இரு காதுகளையும் கூா்மையான ஆயுதத்தால் அறுத்து, அவா் அணிந்திருந்த இரு கம்மல்களையும் பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளாா்.

பழனத்தாவின் அலறல் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

Tags : அவிநாசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT