திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு 13.16 சதவீத போனஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கான போனஸ் பேச்சுவாா்த்தை சுல்தான்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்தைக்கு மங்களம் ஊராட்சி மன்றத் தலைவா் பி.மருதாசலமூா்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.சுப்பிரமணி ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், மங்கலம் பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு 2022-21 ஆம் ஆண்டு தீபாவளி போனஸாக 13.16 சதவீதம் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில், பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.