திருப்பூர்

மாவட்டத்தில் 78,519 பேருக்கு தடுப்பூசி

23rd Oct 2021 11:21 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் 78, 519 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் ஏற்கெனவே 16.11 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 4.97 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற 6 ஆம் கட்ட தடுப்பூசி முகாமில் 78, 519 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT