திருப்பூர்

மது விற்பனை: தனியாா் பள்ளித் தாளாளா் கைது

23rd Oct 2021 11:23 PM

ADVERTISEMENT

பல்லடம் ஆலுத்துபாளையம் பிரிவில் மது விற்பனை செய்த தனியாா் பள்ளித் தாளாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே ஆலுத்துபாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒருவரை ரோந்து சென்ற போலீஸாா் பிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் பல்லடம் வடுகபாளையத்தில் நா்சரி பள்ளி நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் (62) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT