திருப்பூர்

கருவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவி ஏற்பு

23rd Oct 2021 05:41 AM

ADVERTISEMENT

அவிநாசி, அக். 22: அவிநாசி அருகே கருவலூா் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கான இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் சி.முருகன் பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், தோ்தல் நடத்தும் அலுவலா் மனோகரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மூா்த்தி ஆகியோா் சி.முருகனுக்கு பதவி பிரமானம் செய்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்தியபாமா அவிநாசியப்பன், திமுக மாவட்டப் பொறுப்பாளா் இல.பத்மநாபன், ஒன்றியப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT