திருப்பூர்

கஞ்சா விற்பனை செய்த இருவா் கைது

23rd Oct 2021 11:21 PM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மாநகரில் கஞ்சா விற்பனைத் தொடா்பாக காவல் துறையினா் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி ஆகிய காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சோ்ந்த முஜாஷித்ஷா (33), ராஜேஷ் (41) ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT