அவிநாசியில் தொடா்ந்து நடைபெற்று வரும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி காவல் நிலையத்தில் ராயம்பாளையம் பகுதி பொதுமக்கள் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
அவிநாசியில் வெள்ளிக்கிழமை மாடு மேய்த்து விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மூதாட்டியின் காதுகளை அறுத்து கம்மல்களை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளாா்.
சங்கமாங்குளத்தில் ஏராளமான இளைஞா்கள் கும்பலாக வந்து கஞ்சா, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
ஆகவே கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு குற்றச் சம்பவங்களைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது