திருப்பூர்

ரூ.31 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை

22nd Oct 2021 01:53 AM

ADVERTISEMENT

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.31 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு பழனி, வேடசந்தூா், தழையூத்து, நாகையநல்லூா், வாகரை, வையம்பட்டி, மூலனூா் உள்ளிட்ட ஊா்களில் இருந்து 74 விவசாயிகள் தங்களுடைய 1,120 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 54,926 கிலோவாகும்.

காரமடை, ஈரோடு, கோபி, பூனாட்சி, முத்தூா், காங்கயத்தில் இருந்து 10 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.

சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 60.59க்கும், குறைந்தபட்சமாக ரூ.57.51க்கும், சராசரியாக ரூ.51.51க்கும் விற்பனையானது.

ADVERTISEMENT

ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.30 லட்சத்து 91 ஆயிரத்து 212 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

Tags : வெள்ளக்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT