திருப்பூர்

500 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம்

22nd Oct 2021 01:52 AM

ADVERTISEMENT

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூரில் அன்னை தெரேசா மகளிா் தொண்டு நிறுவனம் சாா்பில் 500 மகளிருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அன்னை தெரேசா நிறுவனா் எம்.ராணி தலைமை வகித்தாா்.

சட்ட ஆலோசகா் நாகராஜ், டாக்டா் அம்பேத்கா் அறக்கட்டளை நிறுவனா் முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் திருப்பூா், கோவை, தஞ்சாவூா், ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 500 மகளிருக்கு இலவசம் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இதில் அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

Tags : அவிநாசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT