திருப்பூர்

ரூ.49 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

22nd Oct 2021 01:53 AM

ADVERTISEMENT

 வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 49 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 259 விவசாயிகள் தங்களுடைய 2, 023 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 665 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 13 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா்.

பருத்தி குவிண்டால் ரூ. 6,300 முதல் ரூ. 8, 816 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,650.

ADVERTISEMENT

ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 48 லட்சத்து 94 ஆயிரத்து 796 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : வெள்ளக்கோவில்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT