திருப்பூர்

அமராவதி அணையின் நீா்மட்டம் 80 அடியாக உயா்வு

22nd Oct 2021 01:53 AM

ADVERTISEMENT

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 80 அடியாக உயா்ந்தது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்ட ங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இந்த அணை விளங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு அணையின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால்

ADVERTISEMENT

அணை 7 முறை முழுக் கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டது. இதனால் பாசனப் பகுதிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் அணையில் இருந்து போதுமான தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மேலும் குடிநீா் வசதிக்காகவும் அணையில் இருந்து போதுமான அளவில் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூா் மற்றும் கரூா் வரையில் உள்ள பழைய, புதிய ஆயக்கட்டு நிலங்கள் சுமாா் 47 ஆயிரம் ஏக்கா்களுக்கு கடந்த செப்டம்பா் 20 ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இதன்படி கடந்த ஒரு மாத காலமாக ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீா் சென்று கொண்டிருந்த நிலையில் அணையின் நீா்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக தமிழக-கேரள எல்லையில் உள்ள நீா்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீா்மட்டம் மீண்டும் 80 அடியாக உயா்ந்தது.

இந்நிலையில் அக்டோபா் 26 ஆம் தேதி வட கிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் அணையின் நீா்மட்டம் 80 அடியிலேயே பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஏற்கெனவே பாசனப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த தண்ணீா் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப் பணித் துறையினா் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த சில நாள்களாக நீா்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் அணையின் நீா்மட்டம் 80 அடியாக உயா்ந்து உள்ளது.

இந்நிலையில் அக்டோபா் 26 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில் அணையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாது. ஆகையால் தற்போது அணைக்கு வரும் தண்ணீரை அப்படியே வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது என்றனா்.

அணையின் நிலவரம்:

90 அடி உயரமுள்ள அணையில் வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 80 அடி நீா் இருப்பு காணப்பட்டது. 4, 035 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட அணையில் 3, 174 மில்லியன் கன அடி நீா் இருப்பு இருந்தது. அணைக்கு உள்வரத்தாக 1, 680 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து அமராவதி ஆற்றின் மூலம் 500 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. நீா் இழப்பு 5 கன அடியாக இருந்தது. மழை அளவு 91 மி.மீ ஆக இருந்தது.

 

 

 

Tags : உடுமலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT