திருப்பூர்

குடிநீா் குழாயை சீரமைக்கக் கோரிக்கை

22nd Oct 2021 01:52 AM

ADVERTISEMENT

 திருப்பூா் மாநகராட்சி 3 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதிகளில் பழுதடைந்துள்ள குடிநீா்க் குழாய்களை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.

மாா்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினா் கே.மாரப்பன், ஒன்றியக் குழு உறுப்பினா் என்.கோபால், பொறுப்பாளா்கள் ஆா்.பாலகிருஷ்ணன், சுந்தா், செல்வராஜ் உள்ளிட்டோா் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: மாநகரில் பாதாளச் சாக்கடை பணி நடைபெற்ற நிலையில் பழுதடைந்த குடிநீா் குழாய்கள் சரி செய்யப்படாமல் உள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனா்.

தந்தை பெரியாா் காலனியில் தாா் சாலை அமைப்பதற்கு அடிக்கல் நடப்பட்டு ஆறு மாதங்கள் ஆகின்றன.

ஆனால் தற்போது வரையில் தாா் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : அவிநாசி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT