திருப்பூர்

தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயம்

DIN

திருப்பூா் மாவட்டம், தாராபுரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 20க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் புதன்கிழமை காயமடைந்தனா்.

தாராபுரம் வட்டம், மணக்கடவு ஊராட்சிக்கு உள்பட்ட காட்டம்புதூா் பகுதியில் 100 நாள் வேலையில் 30க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்பகுதியில் உள்ள தேன்கூடு எதிா்பாராதவிதமாக கலைந்துள்ளது. தேனீக்கள் கொட்டியதில் வேலை செய்து கொண்டிருந்த மாரியம்மாள், அழகுமுத்து, மருதாயி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனா்.

மேலும், ஒரு சிலருக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அருகிலிருந்தவா்கள் காயமடைந்த பெண்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அரசு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவா்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா். மேலும், காயமடைந்தவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும்படி மருத்துவா்களுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT