திருப்பூர்

திருப்பூரில் வங்கதேசத்தவர்களை கண்டுபிடிக்க சிறப்புக் குழு அமைக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

DIN

திருப்பூரில் வங்கதேசத்தவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் குழு அமைக்க வேண்டுமென இந்து முன்னணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் அவிநாசியில்  நடைபெற்றது. நிகழ்ச்சி துவக்கமாக, அவினாசி ஈரோடு சாலையிலிருந்து இந்து முன்னணியினர் திருமண மண்டபத்திற்கு பேரணியாக வந்தனர். இதையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு நகரச் செயலாளர் கேசவன் தலைமை வகித்தார்.

மாநிலச் செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர்குமார், தாமு வெங்கடஷேவரன் ஆகியோர் பேசினர். இதையடுத்து, தொழில் நகரமான திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் அதிகப்படியானோர் பணிபுரிந்து வருகின்றனர். ஆகவே அவர்களை கண்டுபிடிக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

தமிழக அரசு கோயில் நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்வதாக அறிவித்துள்ளது. இது பல்வேறு மோசடிகளுக்கு வழிவகுக்கும், எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

மேலும் இந்த திட்டத்தை கண்டித்து அக்.26ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பது, தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு கட்டுப்பாடுகளின்றி பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும் என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட 7 சட்டப் பேரவை தொகுதி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

மேற்குவங்கத்தில் முதல்கட்ட வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு

மணிப்பூரில் பதற்றம்: வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT